மாதம்பை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் சிறுவர் தின நிகழ்வுகள்.
எம்.யூ.எம்.சனூன்
2025 ம் ஆண்டு சிறுவர் தினத்தை முன்னிட்டு சிலாபம் கல்வி வலயத்துக்குட்பட்ட மாதம்பை அல்-மிஸ்பாஹ் கல்லூரி மைதானத்தில் சிறுவர் தின நிகழ்வுகள் சிறப்பாக நடந்தேறின.
பாடசாலை அதிபர் எஸ்.எல்.அன்வர் தலைமையில் ஆசிரியர்களின் ஒத்துழைப்புகளுடன் இந்நிகழ்வுகள் இனிதே இடம்பெற்றன.
"உலகை வழி நடாத்த அன்பால் போஷியுங்கள்" என்பது இந்த வருடத்துக்கான சிறுவர் தினத்தின் தொணிப்பொருளாகும்.
காலை நற்சிந்தனை நிகழ்வில் பாடசாலை அதிபரின் சிறப்புரையை தொடர்ந்து மாணவர்களின் திறன், மகிழ்ச்சி, நலன், தலைமைத்துவம் மற்றும் கூட்டுப் பொறுப்புடன் கூடிய குழுச்செயற்பாடு போன்ற மாணவர்களின் ஆளுமையை வெளிப்படுத்தும் வகையிலான போட்டி நிகழ்வுகள் யாவும் சிறப்பாக நடைபெற்றதுடன் மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்து சிறப்பித்தனர்.
No comments