Breaking News

புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவர்கள் சீனடிக் கலை போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் உயர்தர மாணவர்கள் சீனடிக் கலை போட்டியில் மாகாணம் மட்டத்தில் முதலாம் இடத்தை பிடித்து தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு  பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக அதிபர் ஐ.ஏ நஜீப் தெரிவித்துள்ளார்


மேற்படி சீனடிக் கலையின் மாகாண மட்ட போட்டிகள் வியாழக்கிழமை (09) கெகுணுகொல்ல தேசிய கல்லூரியில் இடம்பெற்றது. சீனடிக் கலையில் ஸாஹிரா தேசிய பாடசாலை சார்பில் உயர்தர மாணவர் குழுவினரகளான ஜே.சாஜித் (தலைவர்)… எம்.ஏ.எம் ஆதில், எம்.கே கைஸ், எம்.எச் ஹயிதம் காசிம், எம் ஏ எம் அஸ்மத். எஸ்.எம் அர்ஷத், எம் எம் எம் முன்தீர், எம் ஆர் எம் றஹீக் ஆகிய மாணவர்களையும் பயிற்றுவித்து வெற்றி பாதைக்கு வழிகாட்டிய ஆசிரியர் எம் ஏ எம் சுபியான் ஆகியோருக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் அதிபர் ஐ.ஏ நஜீப் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments