JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி பிரதான வீதியில் கோப்ரா மின்விளக்கு பொறுத்தும் பணி

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

கற்பிட்டி பிரதான வீதியில் கோப்ரா மின்விளக்குகள் நீண்ட நாட்களாக பழுதடைந்து காணப்பட்டதுடன் அதற்கான புதிய மின் விளக்குகள் கொள்வனவு செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பிரதான வீதயின் பல்வேறு இடங்கள் இருளில் மூழ்கிக் காணப்பட்டன.


இது விடயமாக கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளருக்கு சபையின் உறுப்பினர்கள் தொடராக விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக திங்கட்கிழமை (23) தவிசாளரின் மேற்பார்வையின் கீழ் உப தலைவர் உட்பட உறுப்பினர்களின் வழிக்காட்டலின் கற்பிட்டி பிரதான வீதியில் பழுதடைந்த சகல கோப்ரா மின்விளக்குகளும் மாற்றப்பட்டு புதிய கோப்ரா மின்விளக்குகள் பொருத்தப்படமை குறிப்பிடத்தக்கது.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال