(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டியைச் சேர்ந்த ஆசிரியர் தம்பதிகளான எம் ஆர் எம் றம்ஸான் மற்றும் டி எஸ் எஸ் என் ஸம்ஷாத் ஆகிய இருவரும் தமது பட்டப்பின் கல்வி டிப்ளோமாவை ( PGDE) இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்து கடந்த வியாழக்கிழமை (10) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பட்டமளிப்பு விழா இடம்பெற்றது
வரலாறு பாட ஆசிரியராக கற்பிட்டி பூலாச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் இணைப்பாக கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையிலும் எம்.ஆர்.எம் றம்ஸான் ஆசிரியர் கற்பித்து வருகின்ற அதே வேலை அவரது மனைவி டி எஸ் எஸ் என் ஸம்ஷாத் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் தகவல் தொழில்நுட்ப பாட ஆசிரியையாக கடமையாற்றி வருகின்றார்
ஆசிரியர் எம் ஆர் எம் றம்ஸான் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
