சீ.எம் எம்.நியாஸ் ஆசிரியர் 37 வருட அரச பணியில் இருந்து செவ்வாய்க்கிழமை (2026.08.18 திகதி) ஓய்வு பெறுகிறார். அநூரதபுரம் அழுத்கம கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட சீ. எம். எம். நியாஸ் தனது ஆரம்பக் கல்வியைப் அநு/அழுத்கம முஸ்லிம் வித்தியாலயத்தில் பெற்றதோடு இடைநிலை மற்றும் உயர் கல்வியை கல்பிட்டி அல் - அக்ஸா தேசிய பாடசாலையில் கற்றார்.
1990.01.01.ஆசிரியர் பணியில் இணைந்த இவர் தனது முதல் ஆசிரிய பணியை பு/பள்ளிவாசல் துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கற்பிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றார். பின்னர் 1998 காலப்பகுதியில் குருனாகல் பிரதேசத்தில் திருமண பந்தத்தில் இணைந்தன் நிமித்தம் 2003.06.02. திகதி முதல் கு/ஹதிரவலான முஸ்லிம் வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்று அங்கு தன் கடமையை சிறப்பாக செய்து வந்தார்.சுமார் 5வருட காலம் சிறப்பாக பணியாற்றிய பின்னர் கு/ஹிஸ்புல்லா மத்திய கல்லூரிக்கு 2008.06.04.ஆம் திகதி முதல் இடமாற்றம் பெற்று தனது ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார்.
இவர் சிறு வயது தொடக்கம் இலங்கை இராணுவ சேவையில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வமிக்கவராக இருந்த காரணத்தால் 2008.07.18 தொடக்கம் ஆசிரியர் பணியில் இருந்து தற்காலிக விடுப்பு வழங்கப்பட்டு இலங்கை இராணுவ சேவை பயிற்சிக்காக இணைக்கப்பட்டார். 2010..06.30.தொடக்கம் 2025.01.27. வரையில் இலங்கை இராணுவ தொண்டர் சேவையில் பணியாற்றினார்.
இவர்களது இராணுவ சேவையின் அதிக காலம் வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு மன்னார் பிரதேசங்களில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
தனது ஓய்வு காலத்தை அண்மித்த வேளையில் மீண்டும் ஆசிரியர் பணியை தொடர்வதன் நிமித்தம் கு/ஹிஸ்புல்லா மத்திய கல்லூரியில் 2025.01.28 திகதி தொடக்கம் இணைந்து கொண்டார். தனது 37 வருட கால அரச பணியில் 20 வருடங்கள் ஆசிரியர் பணியிலும் 17 வருடங்கள் இலங்சீ.எம் எம்.நியாஸ் ஆசிரியர் 37 வருட அரச பணியில் இருந்து செவ்வாய்க்கிழமை (2026.08.18 திகதி) ஓய்வு பெறுகிறார். அநுராதபுரம் அழுத்கம கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட
சீ. எம். எம். நியாஸ் தனது ஆரம்பக் கல்வியைப் அநு/அழுத்கம முஸ்லிம் வித்தியாலயத்தில் கற்றதோடு இடைநிலை மற்றும் உயர் கல்வியை கல்பிட்டி அல்அக்ஸா தேசிய பாடசாலையில் கற்றார்.
1990.01.01.ஆசிரியர் பணியில் இணைந்த இவர் தனது முதல் ஆசிரிய பணியை பு/பள்ளிவாசல் துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கற்பிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றார்.பின்னர் 1998 காலப்பகுதியில் குருனாகல் பிரதேசத்தில் திருமண பந்தத்தில் இணைந்தன் நிமித்தம் 2003.06.02. திகதி முதல் கு/ஹதிரவலான முஸ்லிம் வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்று அங்கு தன் கடமையை சிறப்பாக செய்து வந்தார்.சுமார் 5வருட காலம் சிறப்பாக பணியாற்றிய பின்னர் கு/ஹிஸ்புல்லா மத்திய கல்லூரிக்கு 2008.06.04.ஆம் திகதி முதல் இடமாற்றம் பெற்று தனது ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார்.
இவர் சிறு வயது தொடக்கம் இலங்கை இராணுவ சேவையில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வமிக்கவராக இருந்த காரணத்தால் 2008.07.18 தொடக்கம் ஆசிரியர் பணியில் இருந்து தற்காலிக விடுப்பு வழங்கப்பட்டு இலங்கை இராணுவ சேவை பயிற்சிக்காக இணைக்கப்பட்டார்.2010..06.30.தொடக்கம் 2025.01.27. வரையில் இலங்கை இராணுவ தொண்டர் சேவையில் பணியாற்றினார்.
இவர்களது இராணுவ சேவையின் அதிக காலம் வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு மன்னார் பிரதேசங்களில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
தனது ஓய்வு காலத்தை அண்மித்த வேளையில் மீண்டும் ஆசிரியர் பணியை தொடர்வதன் நிமித்தம் கு/ஹிஸ்புல்லா மத்திய கல்லூரியில் 2025.01.28 திகதி தொடக்கம் இணைந்து கொண்டார். தனது 37 வருட கால அரச பணியில் 20 வருடங்கள் ஆசிரியர் பணியிலும் 17 வருடங்கள் இலங்கை இராணுவப் பணியிலும் அர்ப்பணிப்பு மிக்க சேவையினை நாட்டுக்காக வழங்கியது குறிப்பிடத்தக்கது
இவரது ஆசிரியர் பணியில் கற்பித்தல் நடவடிக்கைகளுடன் மாணவர்கள் ஒழுக்க விழுமியங்களை போணுவதில் இவர் காட்டிய ஈடுபாடு பாராட்டுக்குரியது.இவர் கற்பித்த அணைத்து பாடசாலைகளிலும் ஒழுக்க குழுவுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டதன் காரணத்தால் அப்பாடசாலைகள் கல்வியிலும் ஒழுக்கத்திலும் மேலோங்கி இருந்தன.
எதிர்கால மாணவர்களினதும் தன் தாய் நாட்டின் பாதுகாப்பிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட சீ. எம். எம். .நியாஸ் ஆசிரியர் இன்ஷா அல்லாஹூ செவ்வாய்க்கிழமை (2026.08.18) முதல் தனது அரச பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.தெளியா கொன்ன ஹிஸ்புல்லா மத்திய கல்லூரியில் இருந்து ஓய்வு பெறும் அன்னாரின் அர்ப்பணிப்பு மிக்க சேவையினை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக ஓய்வு காலத்தை உடல் உள ஆரோக்கியத்துடன் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாகக் களிக்க
அருள் புரிவானாக....
இவண்
எஸ். எம். அரூஸ்
பிரதித் தலைவர்
அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம்
