(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி பாலக்குடா கொளனி கரடிபள்ளம எனும் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் மறைத்து வைத்திருந்த ஒரு கோடி ரூபாய் பெறுமதியுடைய 433 கிராம் 330 மில்லி ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவரையும் கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.ஜீ.எஸ் சுசந்த தலைமையிலான விஷேட போதை தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பற்றுள்ளது.
இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்றது.
கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.ஜீ.எஸ் சுசந்த தலைமையில் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் கற்பிட்டி பொலிஸ் பரிசோதகர் பத்திரண, பொலிஸ் கொன்ஸ்தாபல் செனவிரத்ன(98777), பிரியங்கர (108841) ஆகியோர் மேற்க்கொண்டனர்.
இச் சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப் பொருள், இரண்டு கையடக்க தொலைபேசிகள் மற்றும் ஒரு சந்தேக நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
https://youtu.be/uADE66L6aEE?si=MM6kCvqwp1W-C23B
