JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டியில் இந்தியாவிற்கு கடத்துவதற்காக வைத்திருந்த கடல் சங்குகள் 4000 மற்றும் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்த பொலிஸார்.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி பிரதேசத்தில் வீடொன்றில் சட்டவிரோதமாக இந்தியாவிற்கு கடல் மார்க்கமாக கொண்டு செல்வதற்காக களஞ்யப்படுத்தப்படிருந்த கடல் சங்கு 44 மூட்டைகளுடன் சந்தேக நபர் ஒருவரும் வியாழக்கிழமை (30) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில பிரேமதாசவின் வழிக்காட்டலின் கீழ் செயல்பட்டு வரும் எஸ் எஸ் பெர்னாண்டோ தலைமையிலான விஷேட போதை தடுப்பு பிரிவினரால் இச் சுற்றிவளைப்பு மேற்க் கொள்ளப்பட்டுள்ளது.

இச் சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்ட சங்குகளின் பெறுமதி பல இலட்சம் எனவும் சுமார் 4000 சங்குகளுக்கு மேல் காணப்படும் எனவும் இதன் பிரதான உரிமையாளர் தலைமறைவாகி உள்ளதாகவும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் இவ் விஷேட பொலிஸ் குழுவின் தலைமை அதிகாரி எஸ் எஸ் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال