(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
ஆஸ்திரேலிய பாதுகாப்பு திணைக்களத்தின் வடக்கு மற்றும் தெற்காசிய பிரிவின் உதவிச் செயலாளர் Ms. Karen Radford, இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவை வியாழக்கிழமை (2026 ஜூலை 30) கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
இங்கு இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இரு தரப்பினருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் தொடர்பாக உதவிச் செயலாளர் Ms. Karen Radford, மற்றும் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையில் சுமூகமான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கையிலுள்ள ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் Colonel Amanda Johnston அவர்களும் கலந்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து, இச்சந்திப்பின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்ன பரிமாற்றமும் இடம்பெற்றது.





