எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் மணல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் கடந்த 15 ஆண்டுகளாக சேவையாற்றிய ஆசிரியை எஸ்.எம்.எஸ்.சமீலாவுக்கு மகத்தான சேவை நலன் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வானது வியாழக்கிழமை (02) பாடசாலையின் அதிபர் பீ. ஜெனற்ராஜ் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஆசிரியரின் சேவையை பாராட்டி "இதய முரசு" என்ற பெயரில் சஞ்சிகையொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இம்மலர் கற்பிட்டி நாவற்காடு றோ.க.த.வித்தியாலயத்தின் தற்போதைய அதிபர் ஏ.ஆர்.எம்.ஏ. வினோஜினி அவர்களினால் நூல் ஆய்வு செய்து தொகுப்புரை வழங்கப்பட்டது.
இதன்போது ஆசிரியை சமீலா பாடசாலை ஆசிரியர்களினால் பொன்னாடை போர்த்தி, பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
மேலும் பெற்றோர்களினாலும், மாணவர்களினாலும் பரிசில்களாலும், வாழ்த்துப்பாக்களினாலும் கெளரவிக்கப்பட்டார்.
இவ்விழாவில் பெற்றோர்கள் சார்பாகவும், மாணவர்கள் சார்பாகவும் வாழ்த்துரைகள், நடன நிகழ்ச்சிகள், நாட்டார் பாடல் போன்ற நிகழ்ச்சிகள் அலங்கரித்தன.














