எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் சமாதானத்துக்கும், நல்லிணக்கத்துக்குமான அமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்ற சமாதான நீதவான்களுக்கான விஷேட கலந்துரையாடல் நிகழ்வொன்று சனிக்கிழமை (27) மாலை புத்தளம் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
புத்தளம் சமாதானத்துக்கும், நல்லிணக்கத்துக்குமான அமைப்பின் தலைவர் சமாதான நீதவான் எச்.எம்.சபீக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதன் செயலாளர் சமாதான நீதவான் ஏ.ஜீ.நவாஸ், அகில இலங்கை சமாதான நீதவான்களுக்கான அமைப்பின், மாகாண அமைப்புக்கான பணிப்பாளர் சமாதான நீதவான் எம்.எஸ்.எம்.முஸம்மில் உள்ளிட்ட அமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்ற சமாதான நீதவான்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது விஷேட நிகழ்வாக அங்கத்தவர்களுக்கு டீ ஷேர்ட் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதோடு, சகல அங்கத்தவர்களுக்கும் டீ.ஷேர்ட்களும் விநியோகம் செய்து வைக்கப்பட்டன.
சம காலத்தில் சமாதான நீதவான்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்கள் தொடர்பாக இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.





























