(அஸ்லம் எஸ்.மௌலானா)
புதிய அலை கலை வட்ட மகளிர் அணியின் உப தலைவியாக எம்.எப். பெளசுல் சிபானிய தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த காலங்களில் மகளிர அமைப்பின் அநுராதபுரம் மாவட்டத்தின் இணைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த இவர் அன்மையில் நடைபெற்ற நிர்வாகத் தெரிவில் அனைவரதும் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று உப தலைவியானார்.
கலைப்பட்டதாரி ஆசிரியையான இவர் தமிழ் இலக்கணத்தை முறையாக கற்றவர். அந்திக்கரை என்ற மரபுக் கவிதை தொகுப்பினை அதற்கு சான்றாக சமர்பித்த சிறந்த கவிஞராவார்.
அத்தோடு முற்றத்து நிலா பாடல் என்ற நூலையும் வெளியீட்டுள்ளார். வித்தாரகை, தேசபிமானி, விஸ்வகீர்த்தி (கல்வி), ரத்னதீப, கவிச்சுடர், கவித்தென்றல் போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.
சமூகத்திற்கு வழிகாட்டியாகவும் பொதுப் பணிகளில் ஈடுபடுபவராகவும் விளங்கும் இவரை புதிய அலை கலை வட்டத்தின் நிறுவுனர் ராதா மேத்தா இந்த உப தலைவர் பதவிக்கு நியமனம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
