எம்.யூ.எம்.சனூன்
புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலயத்தின் மாணவர் கழகமான "ஒமரியன்ஸ் முஸ்லிம் மஜ்லிஸ்" ஏற்பாட்டில், இஸ்லாமிய புத்தாண்டு (முஹர்ரம்) நிகழ்வுகள் (18) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக மாணவர்களின் இஸ்லாமிய மற்றும் பொது அறிவை மேம்படுத்தும் நோக்கில் "அறிவுக்களஞ்சியம்" நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது அறிவாற்றலையும் திறமைகளையும் வெளிப்படுத்தினர்.
மேலும், இஸ்லாமிய புத்தாண்டின் சிறப்பையும், ஹிஜ்ரத் வரலாற்றின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் விழிப்புணர்வு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
மாணவர்களின் உற்சாகமான பங்கேற்புடனும் ஆசிரியர்களின் வழிகாட்டலுடனும் நடைபெற்ற இந்நிகழ்வு, புதிய ஹிஜ்ரி ஆண்டை அர்த்தமுள்ள வகையில் வரவேற்கும் சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது.
"அறிவிலும், ஒழுக்கத்திலும், நற்செயல்களிலும் உயர்வோம்" என்ற தொணிப்பொருளில் நிகழ்வுகள் செவ்வனே நடந்தேறின.



