எம்.யூ.எம்.சனூன்
எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற தமிழ்த்தினப்போட்டி முதலாம் பிரிவில் பாஓதல் நிகழ்வில், கப்பலடி பாடசாலையின் மாணவி எம்.எப்.ஹம்னா புத்தளம் வலய மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற கோட்ட மட்ட தமிழ் தின போட்டியில் இவர் வெற்றி பெற்று வலய மட்ட போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார்.
பாடசாலை அதிபர் எம்.ஜீ. சறூக்கின் மேற்பார்வையில், ஆசிரியை ஏ.டீ.எப். ஜெஸ்ரினாவின் நெறியாள்கையில் இந்த மாணவி இந்த வெற்றி இலக்கை அடைந்துள்ளார்.
இம்மாணவி எச்.யூ. மின்ஹாஸ் மற்றும் எம்.எஸ்.எப்.பாரிஸா தம்பதிகளின் புதல்வி ஆவார்.
இந்த மாணவி மாகாண மட்டத்திலும் முதலிடம்பெற்று, தேசிய மட்டத்திலும் பிரகாசிக்க வேண்டும் என பாடசாலை ஆசிரியரும், கவிஞரும், "நாளும் ஓர் ஆளுமை" நிறைவேற்று பணிப்பாளருமான ஹாமித் எம்.சுஹைப் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
