Breaking News

தேடல் மீடியா கல்லூரியின் ஏற்பாட்டில், "இலங்கையின் சாதனையாளர் மகுட விருது விழா 2026"

 எம்.யூ.எம்.சனூன்

தேடல் மீடியா கல்லூரியின் ஏற்பாட்டில், "இலங்கையின் சாதனையாளர் மகுட விருது விழா 2026" அண்மையில் (மே 31) கொழும்பு டவர் ஹோல் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 


இந்நிகழ்வு தேடல் மீடியா கல்லூரியின் நிர்வாகத் தலைவர் எஸ். ஐ.எம். ஹம்தி தலைமையில் அரங்கேறியது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வைத்தியரும், ஊக்கமூட்டும் பேச்சாளருமான டொக்டர் ருக்‌ஷானா ஜவாஹிர் கலந்துகொண்டார்.


சிறப்பு அதிதிகளாக சக்தி மற்றும் சிரச தொலைக்காட்சிகளின் குருநாகல் மாவட்ட செய்தியாளரும், சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய தூதரகத்தின் ஊடக இயக்குனரும், அமெரிக்க பல்கலைக்கழகத்தின் மனித மேன்மைக்கான தங்க விருது பெற்றவருமான தேசமான்ய, தேசகீர்த்தி ஊடகவியலாளர் ஏ.டபில்யூ.எம்.பஸ்லான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


இதேவேளை 3 எஸ் அகடமி நிறுவனத்தின் நிர்வாகத் தலைவி  நஸ்ரின் சப்ராஸ், Ceylon Media Network & College நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் ரியாசத் ரில்ஸாத்,

பேருவளை அக்கரகொட அல் மத்ரஸத்துல் தாஜுல் மபாஹிரியா மத்ரஸாவின் இமாம் எஸ்.ஐ.எம். அஸ்லாம் (முஅய்யிதி),

AVIQ மீடியா பணிப்பாளர் ஏ.எப்.அஜீமா, NGT Institute நிறுவனத்தின் நிர்வாகத் தலைவி அம்னா ஹலீம் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


இவ்விழாவில் இலங்கையின் பல்வேறு துறைகளிலும் தடம் பதித்த சாதனையாளர்களைப் பாராட்டி, "இலங்கையின் சாதனையாளர் விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், ரமழான் மாதத்தில் நடத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பணப்பரிசுகள், சான்றிதழ்கள், விருதுகள் மற்றும் பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டன. 


அகில இலங்கை அறிவிப்பாளர் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக்கொண்ட நட்சத்திர அறிவிப்பாளர்களுக்கு விருதுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டதோடு, சித்திரப் போட்டியில் வெற்றி வாகை சூடியவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 


மேலும், வளர்ந்து வரும் இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் முகமாக விசேட ஊக்கவிப்பு விருதுகள் வழங்கப்பட்டமை இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக அமைந்தது. 


இலங்கையின் பல்துறை சார்ந்த திறமையாளர்களை அடையாளம் கண்டு, அவர்களின் பயணத்திற்குப் பெருமதிப்பு சேர்த்த ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இவ்விழா அமைந்திருந்தது.











No comments