புளிச்சாக்குளம் உமர் பாரூக் வித்தியாலயத்தின் புதிய கணனி கூடம் திறந்து வைப்பு
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் தித்வா புயல், வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு கணனி மற்றும் கணனி கூடம் வழங்கும் வேலைத்திட்டம் டெக்நோசிட்டி மற்றும் லெப்டப்.எல்கே (Technocity (pvt) Ltd - laptop.lk) நிறுவனத்தின் அனுசரனையுடன் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதன் அடிப்படையில் வியாழக்கிழமை (30) புத்தளம் புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலயத்தின் கணனி கூடம் திறப்பு விழா பாடசாலையின் அதிபர் எம் யூ எம் சாஜஹான் தலைமையில் இடம்பெற்றது
நிகழ்வில் டெக்நோசிட்டி மற்றும் லெப்டப்.எல்கே (Techno city (Pvt) Ltd - laptop.lk) நிறுவனத்தின் உரிமையாளர், இணைப்பாளர் மற்றும் பணிப்பாளர் பிரதமரின் மேலதிகச் செயலாளர், வடமேல் மாகாண கல்விப் பணிப்பாளர், வடமேல் மாகாண கணனி துறைக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், கோட்டக் கல்விப் பணிப்பாளர் மற்றும் பாடசாலையின் முகாமைத்துவ குழுவினர், கணனி பாட ஆசிரியர்கள் , ஆசிரியர்கள், கணனி பாட மாணவர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
சுமார் 7 மில்லியன் ரூபா பெறுமதியான கணனிகள், தளபாடங்கள் உள்ளடங்கிய கணனி கூடம் கிடைக்கப்பெற்றமை ஊடாக பாடசாலை கணனி பாட மாணவர்களின் தகவல் தொழிநுட்ப அறிவை மேலும் மேம்படுத்தி அவர்களின் டிஜிட்டல் உலக பயனணத்திற்கு பெரும் துணையாக அமையும் என்பதுடன் இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பில் தமது நன்றிகளையும் அதிபர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







No comments