JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி முகத்துவாரம் படகு பயணக் கட்டண அறிவித்தல் பலகை அமைக்கப்பட்டது போன்று நிரந்தர இறங்கு துறையும் அமைக்குமாறு கோரிக்கை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி முகத்துவாரம் படகு சேவைக்கான பயணக் கட்டண விபரங்கள் அடங்கிய அறிவித்தல் பலகை வியாழக்கிழமை (30) கற்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.ஆர்.எம் முஸம்மில் தலைமையில் காட்சிப்படுத்தப்பட்டது 


நீண்ட காலமாக கற்பிட்டி முகத்துவாரம் படகு சேவைக்கான பயணக் கட்டண விபரங்கள் அடங்கிய அறிவித்தல் பலகை இல்லாத நிலை காணப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் கடாடண விபரங்கள் அறிந்து கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.


கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம் றிகாஸின் வழிக்காட்டலின் கீழும்  உறுப்பினர்களின் ஒத்துழைப்புடனும் இவ் வேலைத்திட்டம் மேற்க் கொள்ள பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் கற்பிட்டி முகத்துவாரம் படகு பயணம் மேற்க் கொள்ளப்படும் துறையடி மற்றும் முகத்துவாரம் இறங்கு துறைகளில் படகு பயணம் மேற் கொள்ளும் பயணிகளினதும் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதியும் நிரந்தரமான பாதுகாப்பான இறங்கு துறைகள் அமைத்து தருமாறும் கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களிடம் இப்பகுதி வாழ் பொது மக்கள் வேண்டுகோள் முன்வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال