JobVibe.lk - Sri Lanka Job Portal

யாழ் பல்கலைக்கழகத்தில் இரட்டைத் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த மாணவி.

எம்.யூ.எம்.சனூன்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தில் தமிழ்ச் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தை பெற்ற மொஹம்மது பாரூக் பாத்திமா பஸ்லா, 2023 ஆம் ஆண்டு கல்வியாண்டின் 41 வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்துறை சார்ந்து வழங்கப்படுகின்ற இரண்டு தங்கப்பதக்கங்களையும் வென்று சாதனை படைத்துள்ளார்.

குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த மொஹம்மது பாரூக், நூருல் ஹம்சியா தம்பதிகளின் மகளான இவர், யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ்ச் சிறப்புக் கலையைப் பயின்று, தற்போது யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் தற்காலிக உதவி விரிவுரையாளராகப் பணியாற்றி வருகின்றார். 

இவரின் தொடர்ச்சியான உழைப்பும், தமிழ் இலக்கியத்தின் மீது கொண்ட தீராத பற்றுமே இவரது சாதனைக்குக் காரணமாகும். 

இவருக்கு தமிழ் இலக்கியம் சார்ந்த பாடப்பிரிவுகளில் பல்கலைக்கழகத்திலேயே முதலிடம் பெற்றமைக்காக வழங்கப்படும் கௌரவமான விருதான பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை நினைவுத் தங்கப்பதக்கமும், இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் சிறந்த பெறுபேற்றுக்காக வழங்கப்படும் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை நினைவுத் தங்கப்பதக்கமும் கிடைத்தது. 

சிறப்புக் கலைமாணி தமிழ்ப் பாடத்தில் அதி சிறந்த புள்ளிகளைப் பெற்றதன் மூலம் இந்த இரட்டை கௌரவத்தைப் பெற்றுள்ளார். இதன் மூலம் தனது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.









Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال