JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் மாநகர சபை உறுப்பினர் இஷாம் மரிக்காருக்கு எதிராக விஷேட வர்த்தமானி அரசு வெளியிட்டது.

புத்தளம் மாநகர சபை உறுப்பினர் இஷாம் மரிக்கார், துபாயில் நடைபெற்ற ஆசிய பசிபிக் நகரங்கள் உச்சி மாநாடு மற்றும் மேயர்கள் மன்றம் 2025 தொடர்பில் புத்தளம் மாநகர சபை மேயர் ரின்ஷாட் அஹமட் வடமேல் மாகாண ஆளுநரிடம் 9 குற்றச்சாட்டுகளை முன்வைத்து முறைப்பாடு செய்திருப்பதாக புத்தளம் மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம்.இஷாம் மரிக்கார் தெரிவித்தார்.

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆளுநரால் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டுள்ளதுடன், மேயர், பிரதி மேயர், ஆணையாளர், செயலாளர் மற்றும் தொடர்புடைய ஊழியர்களிடமிருந்து வாக்குமூலங்களும் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், குற்றச்சாட்டுகள் தொடர்பான ஒருநபர் விசாரணைக் குழுவின் விசாரணை கடந்த சனிக்கிழமை, 12 செப்டெம்பர் 2026 அன்று குருநாகலில் உள்ள ஆளுநர் மாளிகையில் இடம்பெற்றுள்ளது.

ஓய்வுபெற்ற நீதித்துறை அதிகாரி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த விஷேட தனிநபர் விசாரணைக் குழு தொடர்பான அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் (2485/59) 24 ஏப்ரல் 2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகள் எதுவும் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال