JobVibe.lk - Sri Lanka Job Portal

வலய மட்ட இஸ்லாமிய கலாச்சாரப் போட்டியில் அல்மிஸ்பாஹ் பாடசாலை வரலாற்றுச் சாதனை.

எம்.யூ.எம்.சனூன்

வலய மட்ட இஸ்லாமிய கலாசாரப் போட்டிகளில் சிலாபம் மாதம்பை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலயம் சிறப்பான வெற்றிகளைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இந்த வலய மட்ட போட்டிகள் செவ்வாய்க்கிழமை (25) காலை சிலாபம் பெர்ணடத் தமிழ் பாடசாலையில் இடம்பெற்றது.

அல்மிஸ்பாஹ் பாடசாலை அதிபர் எஸ்.எல்.அன்வரின் வழிகாட்டலில், பாடசாலையின் இஸ்லாமிய மன்ற  பொறுப்பாசிரியர்களின் பயிற்றுவிப்பு மற்றும் அர்ப்பணிப்புடனான வழிநடத்தலின் கீழும், பாடசாலையைப் பிரதி நிதித்துவப்படுத்தி மொத்தம் 13 போட்டிகளில் மாணவர்கள் பங்குபற்றினர்.

அவற்றில் 08 போட்டிகளில் முதலாம் இடங்களையும், 02 போட்டிகளில் இரண்டாம் இடங்களையும், 03 போட்டிகளில் மூன்றாம் இடங்களையும் பெற்று, பங்குபற்றிய அனைத்து போட்டிகளிலும் வெற்றியைப் பதிவு செய்து, பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

இச்சிறப்பான வெற்றியானது சிலாபம் அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் இஸ்லாமிய கலாசாரத் துறையில் ஒரு வரலாற்றுச் சாதனையாக அமைந்துள்ளதாக அதிபர் எஸ்.எல்.அன்வர் தெரிவித்துள்ளார்.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال