JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் பச்சக் காட்டு முந்தல் மக்களின் தொடரான வெள்ளப் பிரச்சினைக்கான தீர்வு.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் சோல்ட் லிமிடட் மற்றும் ரைகம் சோல்ட் லிமிடட் நிறுவனங்களுக்கு முன்னால் காணப்படும் கால்வாய் மூலம் தொடரான வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாக பிரதேச மக்கள் தொடராக தெரிவித்து வந்துள்ளனர்.

இதனை பிரதேச ஊர் மக்கள் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசலின் கவனத்திற்கு அண்மையில் கொண்டு சென்றனர்.

இதற்கான தீர்வை புத்தளம் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கலந்துரையாடி, உரிய அதிகாரிகளின் பங்குபற்றலுடன் ஒரு களவிஜயம் மேற்கொண்டமையை தொடர்ந்து (27) வியாழக்கிழமை அதற்கான நிர்மாண பணிகள் நடைபெற்று வருவதை பாராளுமன்ற உறுப்பனர் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச செயலக அபிவிருத்தி குழு தலைவருமான எம்.ஜே.எம் பைசல், பாலாவி கிராம பிரஜா சக்தி தலைவி மாரி, பிரஜா சக்தி உறுப்பினர்கள், புத்தளம் சோல்ட் லிமிடட் மற்றும் ரைகம் சோல்ட் லிமிடட் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், பாலாவி கிராம மக்களும் கலந்து சிறப்பித்தனர்.











Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال