JobVibe.lk - Sri Lanka Job Portal

ஐக்கிய மக்கள் சக்தியின் முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பட்டியல் புத்தளத்துக்கு - எம். பி. ஆகிறார் புத்தளம் நியாஸ்.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆரம்பம் முதல் புத்தளம் மாவட்டத்தில் கட்சியின் போராளியாக பல தியாகங்களை செய்துள்ள முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினராகவும் முன்னாள் புத்தளம் பிரதேச சபையின் உறுப்பினராகவும் இருந்த எஸ் எச் எம் நியாஸ் அவர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவதற்கு கட்சியின் தலைவர் தீர்மானித்துள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தகவல் ஒன்று வெளியாகியுள்ளது 

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய பட்டியல் சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக புத்தளத்தைச் சேர்ந்த எஸ் எச் எம் நியாஸ் நியமிக்கப்பட உள்ளார்.

புத்தளம் பிரதேச சபையில்  முதல் முஸ்லிம் பிரதிநிதியாகவும் வடமேல் மாகாண சபையில் இரண்டு முறை உறுப்பினராக தெரிவாகியதோடு இறுதியாக இடம்பெற்ற மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று வடமேல் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டார்.

அத்தோடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட என்.டி.எம் தாஹீரின் பதவி காலம் காலாவதியாகியுள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் புத்தளம் மாவட்டத்திற்கு தேசிய பட்டியல் எம்.பியை வழங்கி  எஸ் எச் எம் நியாஸை அதற்க்கு தெரிவு செய்யப்பட்டமை மிகவும் வரவேற்க்கதக்க விடயம் எனவும் அதற்காக புத்தளம் மாவட்டம் வாழ் மக்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கு தமது நன்றியினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال