எம்.யூ.எம்.சனூன்
குருநாகல் சாஹிரா கல்லூரிக்கு நிர்வாக மேம்பாடு மற்றும் பாதுகாப்பு நலன் கருதி சீசீடீவி கெமராக்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.
பாடசாலையின் 2003 க.பொ.த சாதாரண தர பழைய மாணவர் குழுவினர் யாவரும் இணைந்து பாடசாலைக்கு இந்த பெறுமதி வாய்ந்த கெமரா தொகுதியை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
பாடசாலை அதிபர் கே.டீ.ஹாரூன் அவர்களிடம் பழைய மாணவர் குழுவினர் அண்மையில் இவைகளை உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.
இவைகளை பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கிய அனைத்து பழைய மாணவர்களுக்கும் அதிபர் கே.டீ.ஹாரூன் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.











