JobVibe.lk - Sri Lanka Job Portal

98 வது அகவையில் தடம் பதித்துள்ள கண்டல்குழி முஸ்லிம் மகா வித்தியாலயம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி கோட்டத்தில் அமைந்துள்ள ஒரு பழம்பெரும் பாடசாலையாக கண்டல்குழி முஸ்லிம் மகா வித்தியாலயம் 1929. 10. 01 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் முதல் அதிபர் வி. பொன்னையா நியமிக்கப்பட்டதுடன் குறிஞ்சிப்பிட்டியைச் சேர்ந்த அசன் பணிக்கர் 1929. 10.04 ம் திகதி முதல் மாணவராக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார். 

இரு ஆசிரியர்களுடனும் 20 மாணாக்கருடனும் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  17 ஆண்பிள்ளைகளும் 03 பெண்பிள்ளைகளும் சேர்க்கப்பட்டுள்ளனர். 

1970 வரை ஒரேயொரு கட்டிடத்திலேயே பாடசாலை நடைபெற்றுவதுள்ளது. 

98 வது அகவையில் தடம் பதித்துள்ள கண்டல்குழி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் தற்போதைய அதிபராக எம் பி.எம் ஜெசிம் கடமையாற்றுகின்றார்.

மீன்பிடிக் கிராமமாமான கண்டல்குழி இன்று உல்லாசத்துதுறையில் புகழ்பெற்று விளங்குகின்றது.






Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال