JobVibe.lk - Sri Lanka Job Portal

கனமூலை மண்ணிற்குப் பெருமை சேர்த்த பெண் மருத்துவர். கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சேகு அலாவூதீனின் செல்வப் புதல்வியான பாத்திமா அம்னா சாதனை!.

புத்தளம் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான சேகு அலாவூதீன் பாத்திமா அம்னா, தனது மருத்துவப் பட்டப்படிப்பை (MBBS) வெற்றிகரமாக நிறைவு செய்து ஊருக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை புத்தளம் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆரம்ப மற்றும் சாதாரண தரக் கல்வியைப் பயின்ற இவர், தொடர்ந்து ASDA நிறுவனத்தில் 2015 முதல் 2017 காலப்பகுதியில் க.பொ.த உயர்தரக் கல்வியை நிறைவு செய்தார்.

​தனது கடின உழைப்பினால் 2021 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத்திற்குத் தெரிவான இவர், தற்போது தனது MBBS மருத்துவப் பட்டப்படிப்பை முழுமையாக நிறைவு செய்து மருத்துவராகப் பரிணமித்துள்ளார்.

கிராமத்து பாடசாலையில் பயின்று, உயர் கல்வியில் சாதனை படைத்து மருத்துவத் துறைக்குத் தடம் பதித்துள்ள மருத்துவர் சேகு அலாவூதீன் பாத்திமா அம்னாவுக்கு பாடசாலை சமூகமும், பிரதேச பொது மக்களும் தமது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். 




Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال