JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டியில் போதைப் பொருள் விற்பனைக்கு பயன் படுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் சொகுசு வாடகைக் காரை கைப்பற்றிய பொலிஸ் குழு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி நகரில் போதைப்பொருள் விற்பனைக்கு பயண்படுத்துவதற்காக பொலன்னறுவையில் இருந்து வாடகைக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஞாயிற்றுக்கிழமை (07)  இரவு சொகுசு கார் ஒன்றை கைப்பற்றிய கற்பிட்டி பொலிஸார்


கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கபில பிரேமதாசவின்  வழிகாட்டலின் கீழ் கற்பிட்டி உதவி பொலிஸ் பரிசோதகர் எஸ் எஸ் பெர்ணான்டோ தலைமையிலான ஆறு பேர் கொண்ட விஷேட போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரின் ரோந்து நடவடிக்கையின் போது மேற்படி சொகுசு கார் அவதானிக்கப்பட்டு பொலிஸ் குழுவினரால் கைப்பற்றப்பட்டதுடன் கார் சாரதி உட்பட மூவரையும் கைது செய்ததாகவும் இவ்வேளை ஒருவர் போதைப் பொருள் பாவித்திருந்ததாகவும் மேலும் பொலிஸார் தெரிவித்தனர் 


அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் 54 ம் பிரிவின் கீழ் கைப்பற்றிய சொகுசு கார் மற்றும் மூன்று சந்தேக நபர்கள் கற்பிட்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال