புத்தளம் பஸ் நிலையத்தின் கழிவறை ஸ்மார்ட் கழிவறையாக புணரமைப்பு செய்யப்பட்டது.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் மக்களுக்கும், புத்தளம் நகரை நாடி வரும் பொதுமக்களுக்கும் நவீனமான சுகாதாரமான மற்றும் வசதியான பொது சேவைகளை வழங்கும் நோக்கில் அரசாங்கத்தின் சுமார் 9 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புத்தளம் பிரதான பஸ் தரிப்பிடத்தில் புதிய ஸ்மார்ட் கழிவறை (Smart Toilet) வசதிகள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு பொது மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் மாநகர சபையின் மேயர் ரின்ஷாட் அஹமட் இது பற்றி தெரிவித்துள்ளதாவது. புத்தளம் நகருக்கான வெளி ஊர் மக்களின் வருகை பாதிக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பிலிருந்து நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்ளும் பயணிகள் போக்குவரத்து சேவை பேருந்துகள் புத்தளம் மத்திய பஸ் நிலையத்துக்கும் நகர மத்திக்கும் வருவதை தவிர்த்து மாற்று வழி பாதைகளை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறான நிலையினை மாற்றியமைப்பதற்கும் இந்த பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார முறையிலான ஸ்மார்ட் கழிவறைகள் வழிவகுக்கும் எனவும் புத்தளத்தின் வர்த்தக மற்றும் பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.






No comments