JobVibe.lk - Sri Lanka Job Portal

கந்தானையில் புகையிரதத்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து இருவர் உயிரிழப்பு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கந்தானை புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள புகையிரதக் கடவையில்  முச்சக்கர வண்டி ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் அதில் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்தக் கோர புகையிரத விபத்து செவ்வாய்க்கிழமை (09) காலை இடம்பெற்றுள்ளது.


 கந்தானை புனித மரியா புகையிரதக் கடவையில் புகையிரதம் ஒன்று வந்துகொண்டிருப்பதைக் குறிக்கும் வகையில், கடவையின் அபாய எச்சரிக்கை விளக்குகள் மற்றும் ஒலிச் சிக்னல்கள் செயற்படுத்தப்பட்டிருந்த  நிலையில் இருந்தபோதே, முச்சக்கர வண்டி புகையிரதக் கடவையை ஊடறுத்துச் செல்ல முயன்றுள்ளது.


இதன்போது, சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கி வேகமாக பயணித்துக்கொண்டிருந்த புகையிரதத்துடன் முச்சக்கர வண்டி மோதியுள்ளது.


இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஏக்கலை, ஜோஷிட்டா வத்தையைச் சேர்ந்த எம். ரீட்டா என்ற பெண் உயிரிழந்துள்ளார். அத்துடன், ஓட்டோ சாரதியும் விபத்து இடம்பெற்ற இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்


இவ் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال