JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி வன்னிமுந்தல் படகு ஓட்ட போட்டியின் போது தனி ஒருவரை தாக்கிய கும்பல் ஒருவர் காயம் ஒருவர் கைது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி வன்னிமுந்தலில் இடம்பெற்ற படகு ஓட்டப் போட்டியின் போது ஏற்பட்ட குழு மோதலில் முகத்துவாரத்தைச் சேர்ந்த ஒருவர் படுகாயம் அடைந்து கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் சனிக்கிழமை (27) மாலை இடம்பெற்றுள்ளது.

இது பற்றி தெரியவருவதாவது: ஏற்கனவே கற்பிட்டி முகத்துவாரத்தைச் சேர்ந்த நபரால் வன்னிமுந்தல் நபர் ஒருவர் தாக்கப்பட்டதாகவும் அதற்கு பலி தீர்க்கும் வண்ணம் படகில் இருந்த முகத்துவார நபரை படகில் இருந்து இழுத்து வன்னிமுந்தல் பகுதி குழுவினரின் படகுக்குள் போட்டு தனி ஒருவரை குழுவினர் கோடரி, தடிகள் மற்றும் ஹெல்மட் என்பவற்றால் சார மாரியாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த முகத்துவாரம் நபர் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலையிக்கு அனுப்பட்டுள்ளார்.

படகு ஓட்டப்போட்டி கடமையில் இருந்த கற்பிட்டி பொலிஸார் உடனடியாக செயல்பட்டு தாக்கப்பட்ட நபரை மீட்டதுடன் தாக்கிய நபர்களில் ஒருவரை கைது செய்துள்ளதுடன் தாக்கி விட்டு தப்பி ஓடிய ஏனையவர்களை  தேடும் நடவடிக்கையையும் ஆரம்பித்துள்ளனர். என்பதும் குறிப்பிடத்தக்கது.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال