Breaking News

பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்களான ‘PNS TAIMUR’, ‘PNS ASLAT’ மற்றும் நீர்மூழ்கிக் கப்பலான PNS HANGOR ஆகியவை கொழும்புத் துறைமுகத்தினை வந்தடைந்தன

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

நல்லெண்ண வருகைக்காகவும், விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் திங்கட்கிழமை (2026 மே 01) இலங்கையை வந்தடைந்த பாகிஸ்தான் கடற்படையின் இரண்டு (02) கப்பல்களான ‘PNS Taimur’, ‘PNS Aslat’ மற்றும் நீர்மூழ்கிக் கப்பலான ‘PNS Hangor’ ஆகியவற்றை இலங்கை கடற்படையினர் பாரம்பரிய முறையின் படி கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.


கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ள ‘PNS Taimur’ கப்பலின் கட்டளை அதிகாரியாக கேப்டன் Niamat Saeed Khan, ‘PNS Aslat’ கப்பலின் கட்டளை அதிகாரியாக கேப்டன் Nadir Mateen Afridi, மற்றும் ‘PNS Hangor’ நீர்மூழ்கிக் கப்பலின் கட்டளை அதிகாரியாக கேப்டன் Uzair Farooq ஆகியோர் கடமையாற்றுகின்றனர். 


மேலும், கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களின் குழுவினர், முக்கியமான இடங்களைப் பார்வையிடுவதற்காகத் இலங்கையின் பல பகுதிகளுக்குச் செல்லவும், இலங்கை கடற்படைக் கப்பல்களுடன் மேற்கு கடற்படைக் கட்டளையகத்தின் கடற்பரப்பில் PASSEX என்ற கடற்படைப் பயிற்சியில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளனர்.














No comments