உயர்தரப் பெறுபேற்றில் புத்தளம் பெருக்குவற்றான் அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் வரலாற்றுச் சாதனை
அண்மையில் 2026.04 01 ஆம் திகதி இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி புத்தளம் தெற்கு கோட்டத்துக்குட்பட்ட பெருக்குவற்றான் அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் 100% சித்திளைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
பாடசாலை வரலாற்றிலே முதல் முறையாக கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் 3A திறமைச் சித்திகளைப் பெற்று ஊருக்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எஸ். எச். எம். அஸான் தெரிவித்தார்.
அதன்படி இம்முறை கலைப்பிரிவில் இருந்து எம். எப். பாத்திமா சல்ஹா 03 A சித்தியும், எம்.எப். பாத்திமா பாசிலா 02A,B சித்தியும், எம்.என். பாத்திமா நஸ்லா A,02C. சித்தியும், எம்.ஆர். பாத்திமா சஸ்லா A, 02C சித்தியும், எச். அப்ரிஹா BCS சித்தியும் பெற்றுள்ளனர்.
இத்தகைய சாதனை நிகழ்த்திய மாணவர்களையும், இவர்களை ஊக்கப்படுத்தி, பாடங்களைக் கற்பித்த ஆசிரியர்களையும், அதிபர், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் என அனைவரும் பாடசாலை சமூகம் சார்பாக பாராட்டி, தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இவர்களை மாலை இட்டு வரவேற்று அவர்களுக்கான கௌரவம் வழங்கும் நிகழ்வு அதிபர் தலைமையில் நேற்று (02) வியாழக்கிழமை பாடசாலையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


No comments