புலமைப்பரிசில் பரீட்சையில் சாதித்த உமரியன்ஸ்.
எம்.யூ.எம்.சனூன்
வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்திலுள்ள தெற்கு கல்வி வலயத்தை சேர்ந்த புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலத்தின் 7 மாணவர்கள், 2025ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளியை எட்டி சித்தியடைந்துள்ளனர்.
இச்சாதனை, பாடசாலையின் கல்வி தரத்தையும், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கின்றது.
மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், நிர்வாகத்தினருக்கும் பாடசாலையின் அதிபர் எம்.யூ.எம். சாஜஹான் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
இவ்வகையான வெற்றிகள் எதிர்கால கல்விச் செயல்பாடுகளுக்கு ஊக்கமும், பெருமையும் அளிக்கும் என்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சித்தியடைந்த மாணவர்கள் இடமிருந்து வலமாக :
எம்.ஏ.எம்.உஸ்மான் (132), எப். சக்கீ அஹமட் (134), எம்.எஸ்.
ஹிராஸ் அஹமட் (150), எம்.எஸ்.எப். ஸாலிஹா (141), எம்.எஸ்.
கதீஜா (131), கே. சரோனி ( 137), எம்.ஆர்.எப். இஸ்மா (140)
இந்த மாணவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


No comments