கனமூலை MEC கல்வி நிறுவனத்தின் பரிசளிப்பு விழா 2025
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)
கனமூலை MEC கல்வி நிறுவனத்தின் கணிதப் போட்டி , சித்திர போட்டி, சிதம்பராப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள் மற்றும் மூன்றாம் தவணை பரீட்சையில் திறமைச் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா அண்மையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக நிறுவனத்தின் ஸ்தாபகர் ஏ.எம்.எம் நஜீப் கலந்து கொண்டார், விசேட அதிதிகளாக MEC நிறுவனத்தின் தலைவர் இஹ்திஸாம், சிறப்பு அதிதியாக கஜுவத்தை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் மற்றும் ஆசிரியர்களான றிப்கான், ஹரிஸ், றினாஸ் மற்றும் அரூஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது
No comments