புத்தளம் கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆறு மாணவர்கள் சித்தி
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இருந்து இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 39 மாணவர்களில் ஆறு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
1.முஹம்மது சமீம் ஆயிஷா ஐனா 155
2.வஸீம் ரஜா ஆகில் அஹ்மட் - 144
3.முஹம்மத் முபீத் ஆயிஷா அத்தியா - 143
4.முஹம்மத் இஜிலான் பாத்திமா இஷாபா - 137
5.வஸீம் ரஜா ருக்கையா அலா - 134
6.முஹம்மது றியாஸ் றஹ்பா -134
ஆகியோர் புத்தளம் மாவட்டத்தின் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளதாக அதிபர் எஸ் நஸ்மி தெரிவித்துள்ளார்.
இம் மாணவர்களின் வெற்றிக்கு அயராது பாடுபட்ட வகுப்பாசிரியர்களான ஏ. சீ. எப். நஸ்ரின், ஏ. எல். எப். றிஸ்வானா ஆகியோருக்கும் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் நிர்வாக உறுப்பினர்கள் பாடசாலை நலன்விரும்பிகள் என சகலருக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக தனது வாழ்த்துக்களை அதிபர் எஸ் நஸ்மி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இன்று (04) பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் சித்திபெற்ற மாணவரகளை கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் தலைமையில் இடம்பெற்ற போது பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தனர்.
No comments