புத்தளம் ஐ.சொப்ட் கெம்பஸின் புதிய கட்டட திறப்பு விழா.
எம்.யூ.எம். சனூன்
புத்தளம் ஐ.சொப்ட் கெம்பஸின் புதிய கட்டட திறப்பு விழா திங்கட்கிழமை (05) காலை புத்தளம் கே.கே.வீதியில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
ஐ.சொப்ட் கெம்பஸின் ஸ்தாபக நிறைவேற்று பணிப்பாளர் எம்.கே.எம்.அப்ராஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உலமாக்கள், அதிபர்கள், கல்வியியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டு இதனை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தனர்.
2010 ம் ஆண்டு புத்தளம் நகரில் ஸ்தாபிக்கப்பட்ட இந்த ஐ.சொப்ட் கெம்பஸ் 15 வருடங்கள் தற்காலிக கட்டடங்களில் இயங்கி பல்வேறு முயற்சிகளின் பலனாக சொந்தமான கட்டத்தில் இயங்குவதற்கான இமாலய சாதனையை அடைந்துள்ளது.
இந்நிகழ்வில் வரவேற்புரையினை அதன் ஸ்தாபக நிறைவேற்று பணிப்பாளர் எம்.கே.எம்.அப்ராஸ் நிகழ்த்தினார். அவர் தனது தலைமையுரை யில்,
தாம் கடந்து வந்த கடினம் மிக்க பாதையினை விளக்கியதோடு புதிய கட்டட திறப்பு விழாவையொட்டி தனது பெரிய தந்தை காலஞ்சென்ற ஆசிரியர் அப்துல் பாரி அவர்களது ஞாபகார்த்தமாக "அப்துல் பாரி பௌண்டேஷன்" மூலம் தந்தையை இழந்த பிள்ளைகளுக்கு இலவசமாக பாட நெறிகளை நடாத்தவுள்ளதாகவும் புதிய கட்டடத்தில் எச்.என்.டி, டிகிரி பாட நெறிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஐ.சொப்ட் கெம்பஸின் பழைய மாணவியும், பழைய மாணவர் சங்கத்தின் செயலாளருமான ரப்அத் ஆரா நிகழ்வினை சுவைபட தொகுத்து வழங்கினார்.
No comments