திருகோணமலை மாவட்டத்தில் மாத்திரம் 4,490.7 மில்லியன்
மு.கா தலைவர் ரவுப் ஹக்கீம் அமைச்சராக இருந்தபோது எந்தவித அபிவிருத்தி வேலைகளும் செய்யவில்லை, ஒரு கம்பையும் புடுங்கவில்லை, ஒரு செங்கல்லையும் நாட்டவில்லை என்ற குற்றச்சாட்டினை சிலர் தொடர்ந்து சுமர்த்தி வருகின்றனர்.
இந்த பிரச்சாரமானது தனது சார்பு அரசியல் தலைவர்களை புகழ்பாடுவதை விட, அவர்களுக்கு சவாலாக இருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை தொடர்ந்து தூற்றுவதன் மூலம் முஸ்லிம் காங்கிரசை அழிக்க முடியும் என்பது அவர்களது தந்திரோபாயமாக இருக்கலாம்.
அபிவிருத்தி பற்றிய பல உண்மைகள் தெரிந்திருந்தாலும், ஆதாரபூர்வமாக உண்மையை கண்டறியும் நோக்குடன் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் (RTI) அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களில் 2015 தொடக்கம் 2019 வரையில் ரவுப் ஹக்கீம் நகர திட்டமிடல் அமைச்சராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பற்றிய விபரங்களை கோரியிருந்தேன்.
அதில் திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விபரங்கள் பற்றி இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்திலிருந்து பதில் கிடைக்கப்பெற்றது.
அதில் 2015 தொடக்கம் 2019 வரையில் மாத்திரம் 4,490.7 மில்லியன் ரூபாய்கள் செலவளிக்கப்பட்டுள்ளது.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments