புத்தளம் கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலய மாணவிகள் இஸ்லாமிய கலாச்சார நாடகப் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலய மாணவிகள் இஸ்லாமிய கலாச்சார நாடகப் போட்டியில் மாகாணம் மட்டத்தில் முதலாம் இடத்தைப் பிடித்து தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் ஐ. என். எம். எம். லாஹிர் தெரிவித்தார்.
மேற்படி இஸ்லாமிய கலாச்சார நாடகப் போட்டியின் மாகாண மட்ட போட்டிகள் இன்று (09) வியாழக்கிழமை கெகுணுகொள்ள தேசிய பாடசாலையில் இடம்பெற்றது. இஸ்லாமிய கலாச்சார நாடகப் போட்டியில் மாணவிகளான எம். என். எப். நமா, எம். எச். எப். இஷாமா, எம். ஆர். எப். சம்ஹா, எம். எப். எப். பஸீஹா, என். மஹ்ரா பர்வீன், பீ. எப். அப்ரின், எம். எப். எப். பஹ்மா, எம். என். எப். நுஹா ஆகியோர்களையும், நாடகத்தை எழுதி, மாணவிகளை பயிற்றுவித்து வெற்றி பாதைக்கு வழிகாட்டிய பாடசாலையின் ஆங்கிலப் பாட ஆசிரியரான எம். எச். எம். அமீர் அலி மற்றும் இணைப்பாட விதான ஆசிரியர் ஏ. எம். எப். றிஹாயா, எப். நளீபாஆகியோருக்கு பாடசாலை நிர்வாகம் சார்பாக தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments