JobVibe.lk - Sri Lanka Job Portal

முருங்கை காய்க்கு ஒரு அடையாளம் கொடுத்த : இயக்குனர் K. பாக்கியராஜ் காலமானார்!!

தமிழ்த் திரையுலகம் மிகக் குறுகிய கால இடைவெளியில் ஒரு ஆசிரியரையும், அவரின் திறமையான மாணவரையும் இழந்து பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது என்று தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம். கே. ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்திய திரைப்பட உலகில் தனித்துவமான திரைக்கதை சொல்லும் பாணியாலும், எளிமையான வசனங்களின் மூலம் ஆழமான கருத்துகளை வெளிப்படுத்தும் திறமையாலும் ரசிகர்களின் மனதில் அழியாத இடம்பிடித்தவர் இயக்குநர் கே. பாக்யராஜ். கதை, திரைக்கதை, நடிப்பு, இயக்கம் என பல துறைகளில் தன்னுடைய முத்திரையைப் பதித்த அவர், தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் திகழ்ந்தார்.

தன்னுடைய படைப்பாற்றலால் மட்டுமல்லாமல், பல இளம் திறமைகளை இயக்குநர்களாக உருவாக்கிய வழிகாட்டியாகவும் அவர் பெருமை பெற்றவர்.

அண்மையில், திரைத்துறையில் ஐம்பது ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததையொட்டி நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு அவரைப் பாராட்டும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்வில் அவருடைய கலைப்பயணத்தை நினைவுகூர்ந்த தருணங்கள் இன்றும் மனதில் நிற்கின்றன.

திரைப்படத் துறைக்கு மேலும் பல ஆண்டுகள் சேவை செய்யக்கூடிய ஆற்றலும் அனுபவமும் கொண்டிருந்த அவர் மறைந்திருப்பது கலை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

அவரது மறைவால் துயருறும் திருமதி பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, சரண்யா மற்றும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலக சகோதரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தனது படைப்புகளின் வழியாக பாக்யராஜ் அவர்கள் என்றும் தமிழ் மக்களின் நினைவிலும் இதயங்களிலும்  நிலைத்து நீற்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


நன்றி : 

எழுத்தாளர் இர்ஷாத் ரகும துல்லாஹ்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال