JobVibe.lk - Sri Lanka Job Portal

தேசிய மட்டத்திற்கு தெரிவு.

எம்.யூ.எம்.சனூன்

குளியாப்பிட்டி மைதானத்தில் அண்மையில் (02) நடைபெற்ற மாகாண மட்ட வொலிபோல் சுற்றுப் போட்டியில், புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலயத்தின் 18 வயதிற்குட்பட்ட கரப்பந்தாட்ட அணி சிறப்பான வெற்றியைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

இவ்வெற்றியைப் பெற்ற மாணவர்களை பாடசாலை அதிபர் எம்.யூ.எம்.சாஜஹான், ஆசிரியர்கள் மற்றும் முழு பாடசாலைச் சமூகமும் மனமார வாழ்த்துகின்றதுடன், தேசிய மட்டப் போட்டியிலும் சிறந்து விளங்கி மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றது.

அத்துடன், இவ்வணியை திறம்பட வழி நடத்திய பயிற்றுவிப்பாளர் எம். சி. சுலைமான் அவர்களுக்கும், அணியினருக்கு உறுதுணையாக இருந்த அனுசரணையாளர் பாஹிம் அவர்களுக்கும் பாடசாலைச் சமூகம் தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال