JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் பாலாவி கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்ட வரிய குடும்பம் ஒன்றிற்கு நிரந்தர வீடொன்ற அமைப்பதற்கான ஆரம்ப கட்ட செயற்பாடுகள்.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் பிரதேச செயலக பிரிவின் பாலாவி கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்ட  வரிய குடும்பம் ஒன்றிற்கு நிரந்தர வீடொன்றை அரசாங்க நிதியுதவியுடன் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட செயற்பாடுகளை புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல் அண்மையில் ஆரம்பித்து வைத்தார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் இந்த வீடுகள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. 

தெரிவு செய்யப்பட்ட ஒரு குடும்பத்திற்கு புதிய வீடுகள் வழங்கப்படுவதன் மூலம், அவர்களின் வீடமைப்பு கனவை நனவாக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினரும் கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச செயலாக அபிவிருத்தி குழு தலைவருமான எம்.ஜே.எம்.பைசல், புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் இஸ்ஸதீன் கியாஸ், பிரஜா சக்தி  தலைவி மாரி, தேசிய மக்கள் சக்தியின் கட்சி உறுப்பினர்கள், வீட்டு பயனாளிகள் மற்றும் வீட்டுதிட்ட உத்தியோகத்தரும் கலந்துகொண்டார்கள்.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال