எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் பிரதேச செயலக பிரிவின் போதிராஜபுர கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்ட வரிய குடும்பம் ஒன்றிற்கு நிரந்தர வீடொன்றை அரசாங்க நிதியுதவியுடன் அமைப்பதற்காக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசலினால் அண்மையில அடிக்கல் நாட்டப்பட்டது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் இந்த வீடுகள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச செயலக அபிவிருத்தி குழு தலைவருமான எம்.ஜே.எம்.பைசல், பிரஜா சக்தி தலைவர் திவங்க ஜினோஸ், தேசிய மக்கள் சக்தியின் கட்சி உறுப்பினர்கள், வீட்டு பயனாளிகள், அரச உத்தியோகத்தர்கள் மறிறும் வீட்டுத்திட்ட உத்தியோகத்தரும் கலந்துகொண்டார்கள்.



