JobVibe.lk - Sri Lanka Job Portal

சாய்ந்தமருது நூலகத்தின் ஏற்பாட்டில் கல்வியியலாளர் ஏ.பீர் முகம்மதினால் அல்ஹிலாலுக்கு நூல்கள் அன்பளிப்பு.!

(செயிட் ஆஷிப்)

சாய்ந்தமருதைச் சேர்ந்த ஓய்வுநிலை கல்வி அதிகாரியும் சிரேஷ்ட எழுத்தாளருமான ஏ. பீர் முகம்மது அவர்களின் கைவசமிருந்த பெறுமதிமிக்க நூல் தொகுதி ஒன்று, சாய்ந்தமருது பொது நூலக நூலகர் ஏ.எல்.எம். முஸ்தாக் அவர்களின் ஒருங்கிணைப்பில், சாய்ந்தமருது கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கிலும், எதிர்வரும் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டும் சாய்ந்தமருது பொது நூலகத்தினால் இந்த விசேட வேலைத்திட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.

இந்ந்நிகழ்வு நேற்று அல்-ஹிலால் வித்தியாலய அதிபர் கே.எல். ஜஃபர் அவர்களின் தலைமையில் பாடசாலை நூலகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இச்செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக, கடந்த வருடம் சாய்ந்தமருது மழ்ஹருஷ் ஷம்ஸ் தேசிய பாடசாலைக்கும் எழுத்தாளர் ஏ. பீர் முகம்மது அவர்களினால் நூல் தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال