தென் மாகாண மலையக மக்களின் காணி பிரச்சினைகள் தொடர்பான ஊடகச் சந்திப்பு
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
தென் மாகாண மலையக மக்கள் எதிர்நோக்கும் காணி பிரச்சினைகள் தொடர்பாக பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பு சனிக்கிழமை (21) விசேட ஊடகச் சந்திப்பொன்றை நடத்தியது.
இந்த ஊடகச் சந்திப்பில் தோட்டப் பகுதிகளில் வாழும் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி சமூக தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அரசாங்கத்திடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்ததுடன், அவை அடங்கிய மகஜர் ஒன்றிட்கு கையெழுத்திட்ட அதேவேளை இந்த மகஜரை ஜனாதிபதி செயலகத்துக்கு கையளிப்பதற்கு முடிவு செய்தனர்.
கோரிக்கைகள்:
1. 1993 ஆம் ஆண்டிற்குப் பின்னர் 7 பர்ச்சஸ் காணி பெற்ற மலையக மக்களைப் பற்றிய துல்லியமான தகவல்கள் இல்லாததால், அவற்றை சேகரித்து புதுப்பிக்கும் நடவடிக்கைகளை பிரதேச செயலாளர் அலுவலகங்களுக்கு அவசரமாக அறிவுறுத்தல் வழங்குதல்.
2. வழங்கப்பட்ட காணிகளை மீள்மதிப்பீடு செய்து எல்லைகளை தெளிவாக குறியிட நடவடிக்கை எடுக்குதல்.
3. இம்மக்களுக்கு காணி உறுதிப்பத்திரம் (ஒப்புதல் பத்திரம்) வழங்கி, சட்டபூர்வ உரிமையை உறுதி செய்தல்.
4. லைன் அறைகளில் வசிக்கும் மற்றும் எந்தவொரு காணி உரிமையும் இல்லாத குடும்பங்களுக்கு குறைந்தது 20 பர்ச்சஸ் காணி வழங்குதல்.
5. வழங்கப்பட்ட காணிகளை தோட்ட நிர்வாகத்திலிருந்து பிரித்து, அவற்றை உத்தியோகபூர்வ கிராமங்களாக அறிவிக்கும் நடவடிக்கை எடுக்குதல்.
மேற்கண்ட கோரிக்கைகள் ஜனாதிபதிக்கு கையளித்து அதுகுறித்து கலந்துரையாடத் தயாராக இருப்பதாக அமைப்பு தெரிவித்தது.



No comments