Breaking News

சிங்கள பேச்சுப்போட்டியில் கற்பிட்டி அல் அக்ஸாவின் ஆயிஷா மனால் தேசிய மட்டத்திற்கு தெரிவு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இரண்டாம் மொழி சிங்கள பேச்சுப்போட்டியில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின்  தரம் 08 ல் கல்வி பயிலும் மாணவி எம்.நசீம் ஆயிஷா மனால் மாகாண மட்டத்தில் முதலாம் இடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார் 


மாணவி ஆயிஷா மனாலுக்கு வழிகாட்டி பயிற்றுவித்த சிங்களப்பாட ஆசிரியைகளான பவானி, சந்தமாலி தனுஜா மற்றும் இணைப்பாளர் ஆசிரியை  சீ.எஸ்.எம்.எப் பரீன் இல்ஹாம் ஆகியோருக்கு மாணவியின் பெற்றோர் தமது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.


மேலும் தமிழை தாய் மொழியாக கொண்டு கல்வி கற்கும் மாணவி ஆயிஷா மனால் சிங்கள பேச்சில் இவ்வாறானதொரு சாதனையை ஆறாம் தரத்தில் கல்வி கற்ற வேளையில் நிலைநாட்டியமை குறிப்பிடத்தக்கது.




No comments