கோலாகலமாக நடைபெற்ற மணல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய சிறுவர் தினக் கொண்டாட்டம்.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் மணல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலையின் சிறுவர் தினக் கொணடாட்டம் கோலாகலமாக சிறப்பு காலைக்கூட்டத்துடன் ஆரம்பமானது.
பாடசாலை அதிபர் பா.ஜெனற்ராஜின் அயராத முயற்சியின் வெற்றியாக பெறப்பட்ட அனைத்து மாணவர்களுக்குமான குடிநீர் கொள்கலன்கள் வகுப்பு ரீதியாக இதன்போது பகிரப்பட்டன.
இது சிறுவர் தினத்தை மேலும் சிறப்பாக்கிய நிகழ்வாக அமைந்திருந்தது.
தொடர்ந்து பாடசாலையின் நுழைவாயிலில் ஆரம்பமான சிறுவர் தின பவனி பிரதான வீதி வரை சென்றதுடன் மாணவர்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பாகவும் அமைந்திருந்தது.
தொடர்ந்து அடுத்த கட்டமாக ஆண் மாணவர்களுககான கிரிக்கெட் துடுப்பாட்டம் ஆரம்பமானது. பந்து மாற்றல் , பலூன் உடைத்தல், சமனிலை ஓட்டம், தொப்பி மாற்றுதல், சங்கீதக் கதிரை, தடை தாண்டல், யானைக்கு கண் வைத்தல் போன்ற பல்வேறுபட்ட விளையாட்டு நிகழ்வுகள் மாணவர்களின் மனதிற்கு மகிழ்வூட்டின.
மாணவர்களுக்கு இதன்போது பரிசில்களும் வழங்கப்பட்டன. அத்துடன் மதிய உணவுடன் ஐஸ்கிரீமும் வழங்கப்பட்டது. இவ்வாறு கோலாகலமாக நடந்த விளையாட்டு நிகழ்வுகள் அதிபரின் வாழ்த்து உரையுடன் இனிதே நிறைவுற்றன.
No comments