Breaking News

புத்தளம் கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வு.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் தெற்கு கோட்டத்துக்குட்பட்ட கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சர்வதேச சிறுவர்  தின நிகழ்வுகள் பாடசாலை வளாகத்தில் (01) இடம்பெற்றன.


அதிபர் ஐ.என்.எம்.எம். லாஹிர் தலைமையில் கோலாகலமாக இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் வீதி ஊர்வலமும் இடம்பெற்றது.


இதன்போது சிறுவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலும், கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையிலும், ஊர்வலமாக சென்ற மாணவர்கள் "எங்களைத் துஷ்பிரயோகம் செய்யாதீர்கள்", "எங்கள் நாடு எங்கள் கைகளில்", "கல்வி என்பது கண்களைத் திறக்கும்", "இன்றைய சிறார்கள் நாம் நாளைய தலைவர்கள்", "இரக்கம் காட்டுங்கள் உங்கள் இதயம் தொடுவோம்", சிறகை விரித்து பறக்கும் சிட்டுக் குருவிகள் நாங்கள்" " சிறுவர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்போம்"  என்பன போன்ற சுலோகங்களை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.


இந்நிகழ்வில்  பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


இவ்வருடத்திற்கான சிறுவர் தினமானது "உலகை வழிநடாத்த அன்பால் போஷியுங்கள்" எனும் தொணிப் பொருளின் கீழ் நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

















No comments