Breaking News

கற்பிட்டி ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலையில் இடம்பெற்ற ஆசிரியர் தின நிகழ்வு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கற்பிட்டி ரோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலத்தில் செவ்வாய்க்கிழமை (07) பாடசாலை அபிவிருத்தி குழு, பழைய மாணவர்கள் மற்றும் பொற்றோர்களின் ஏற்பாட்டில் அதிபர் திருமதி சகீலாவின் ஆலோசனைக்கு அமைய ஆசிரியர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது


ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் சாதாரணதர தர மற்றும் உயர் தர மாணவர்களால் சிறப்பாக  நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன அதன்படி மாணவர்களால் கவிதைகள், பாடல்கள், விழிப்புணர்வு நாடகங்கள், நடனங்கள் போன்ற கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு


ஆசிரியர்களுக்கான விளையாட்டு  போட்டிகள் பலவும் நடாத்தப்பட்டதுடன் ஆசிரியர்களின் சேவையை பாராட்டி ஆசிரியர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.










No comments