கற்பிட்டியில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பழைய மாணவர்கள்.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கற்பிட்டி அல் அக்ஸாவில் கற்ற 2002;ம் ஆண்டு சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களின் ஏற்பாட்டில் தாங்களுக்கு கற்பித்து ஓய்வு பெற்றுள்ள ஆசிரியர்களை கௌரவிக்கும் முகமாக திங்கட்கிழமை (06) இரவு விஷேட ஒன்றுகூடல் ஒன்றை ஏற்பாடு செய்து ஓய்வுபெற்ற ஆசிரியர்களை ஆச்சரியப்பட வைத்த நிகழ்வு இடம்பெற்றது
புதுமையான பாராட்டக்கூடிய நிகழ்வாக அமைந்த மேற்படி ஏற்பாட்டில் அன்றைய மாணவப் பருவ நினைவலைகளை மீட்டி பார்த்து மகிழ்ந்தனர்.
இவ்வாறு ஓய்வுபெற்ற ஆசிரியர்களும் ஆசிரியர் தினத்தன்று கௌரவிக்கப்பட்ட வேண்டும் என்ற நற்ச் செய்தியையும் தெரிவித்ததுடன் ஆசிரியர்களுக்கான இரவு போசணமும் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது
கூர கல்பிட்டியில் முதன்முதலாக ஒய்வு பெற்ற ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்து நம்ப முடியாத இன்ப அதிர்ச்சி கொடுத்த பழைய மாணவர்களுக்கு நன்றி கூறியதோடு பாடசாலை கால இனிமையான நினைவுகளையும் நினைவு கூர்ந்ததோடு இதேபோல ஏனைய ஆசிரியர்களும் பழைய மாணவர்எளால் கௌரவப்படுத்தப்படுத்தப்பட வேண்டும் என அன்பான வேண்டுகோளை விடுத்தனர் .
பின்னர் ஆசியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட விருந்து உபசாரத்தில் ஆசிரியர்கள் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டனர்.
பல ஆசியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு ஒரு சில ஆசிரியர்கள் தவிர்க்க முடியாத காரணங்களானால் கலந்து கொள்ள முடிய வில்லை என்பதை அறிவித்து இருந்தார்கள்.
No comments