Breaking News

கற்பிட்டி தலவில் பகுதியில் பைசல் எம்.பி கலந்து கொண்ட விஷேட கலந்துரையாடல்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தலவில் மேற்கு  கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள சென்.அன் விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும் மீனவ தொழிலாளர்களின் பிரச்சினை சம்மந்தமாக இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  எம் ஜே எம் பைசல்  கலந்து கொண்டார்.


இதன்போது மேற்படி விளையாட்டு மைதானத்தின் குறைபாடுகள் மற்றும் மீனவ கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையப்பட்டது.


இதில் விளையாட்டு கழகத்தின் அங்கத்தவர்களும் கடற்தொழிலாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.







No comments