Breaking News

கற்பிட்டி கீரிமுந்தல் திரு சிலுவை நாதரின் வருடாந்த திருவிழா சிறப்பாக இடம்பெற்றது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி  டச்பே கிராம உத்தியோகத்தர் பிரிவில் உச்சமுனை எனும் தீவில் வெள்ளைக்கார குடா எனும் இடத்தில் ஒரு பக்கம் பெருங்கடலாலும் மறுபக்கம் சிறுகடலாலும் சூழப்பட்டுள்ள ஒரு தொன்மை வாய்ந்த அழகான தீவாக கீரிமுந்தல் காணப்படுகின்றது.


கி.மு 700 ம் நூற்றாண்டிலே மன்னார் மாதோட்டம், குதிரைமலை , துறைமுக வர்த்தக பெருந்தோட்ட வரலாற்றோடு மக்களின் வாழ்வியல் ஆரம்பமாகிறது. மேலும்  1811 ம் ஆண்டு இவ் ஆலயம் கட்டப்பட்டுள்ளதாக ஆலயத்தில் உள்ள மணியில் பொறிக்கப்பட்டுள்ளது.


கற்பிட்டியில் இவ்வாறான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கீரிமுந்தல் திருச் சிலுவை ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஞாயிற்றுக்கிழமை மறைகோட்ட முதல்வர்  அருட்தந்தை மைக்கல் கனீஸியஸ் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது


மேலும் பங்குதந்தை எண்டன் நிரோஷன் அடிகள், உச்சமுனை பங்குதந்தை ஜொய்ஸ்டஸ் அடிகள், உதவி பங்குதந்தை கிருஷாந்த் அடிகள், கீரிமுந்தல் மண்ணின் அருட் சகோதரி சிந்தாத்திரி நலனி ஆகியோருடன் இன்னும் பல பங்குதந்தைகள், அருட்சகோதரிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.















No comments