Breaking News

புத்தளம் எருக்கலம்பிட்டி டொமினோ பிரிமியர் லீக் கரப்பந்தாட்டத்தில் சாம்பியனானது டொமினோ ஸ்டார்ஸ்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் எருக்கலம்பிட்டி மையச் சேர்ந்த மர்ஹூம்களான ஏ.எல் அன்பஸ் மற்றும் ஏ.எச்.எம் அப்ஸிர் ஞாபகார்த்தமாக நடைபெற்ற டொமினோ பிரிமியர் லீக் கரப்பந்தாட்ட சுற்றுத் தொடர் புத்தளம் எருக்கலம்பிட்டி டொமினோ பார்க்கில் இரவு ஆட்டமாக மின்னொளியில் 04 ம் திகதி தொடக்கம் 06 ம் திகதி வரை மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.


லீக் தொடரில் 6 அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.


மிகவும் விறுவிறுப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இடம்பெற்ற லீக் தொடரில் சமர்செய்த அணிகளில் Domino Stars, Domino titans, Domino Rock, Domino Power ஆகிய நான்கு அணிகள் ப்லே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.


மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இடம்பெற்ற ப்லே ஆப் சுற்றில் அபாரமாக விளையாடிய டொமினோ ஸ்டார்ஸ் (Domino Stars) மற்றும் டொமினோ பவர் (Domino Power) ஆகிய அணிகள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.


பார்வையாளர்களினதும், வீரர்களினதும் மிகுந்த ஆரவாரத்துக்கு மத்தியில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் Domino Stars அணி Domino Power அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.


தொடரில் பங்குகொண்ட சகல போட்டிகளிலும் டொமினோ ஸ்டார்ஸ் (Domino Stars) அணி வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டியில் மிகவும் அபாரமாக விளையாடி கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டனர்.


தொடரில் சாம்பியன் ஆன டொமினோ ஸ்டார்ஸ் (Domino Stars) அணிக்கு வெற்றிக்கிண்ணம் மற்றும் பணப்பரிசு வழங்கப்பட்டதுடன், இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்ட டொமினோ பவர் (Domino Power ) அணிக்கும் வெற்றிக்கிண்ணம் மற்றும் பணப்பரிசு வழங்கப்பட்டன.


சாம்பியன் கிண்ணத்திற்கு தொழிலதிபர் ஏ.ஜீ.எம் அஸாருதீன் அனுசரணை வழங்கி இருந்ததுடன், பணப்பரிசினை தொழிலதிபர் எச் எம் இக்ராம் வழங்கிவைத்தார்.


இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்ட அணிக்கான கிண்ணத்திற்கு அல்ஹிக்மா விளையாட்டு கழகம் அனுசரணை வழங்கி இருந்ததுடன், அவர்களுக்கான பணப்பரிசினை தொழிலதிபர் ஏ.ஜீ.எம் அஸாருதீன் வழங்கிவைத்தார்.


வளர்ந்து வரும் இளம் வீரருக்கான பணப்பரிசினை டொமினோ ஸ்டார்ஸ் (Domino Stars) அணியின் எஸ் ருஷ்தி பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான பணப்பரிசை தொழிலதிபர்களான ஏ.ஜீ.எம் அஸாருதீன் மற்றும் ஜே.எம் சப்ரீன் ஆகியோர் இணைந்து வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது





No comments